10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

 

10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டு விட்டார்கள். இத்தகைய சூழலில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கடந்த கல்வி ஆண்டில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த முறை எந்த தேர்வும் நடத்தப்படாததால் பாடவாரியாக தேர்ச்சி என்று மட்டும் சான்றிதழில் குறிப்பிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சான்றிதழ் வழங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பெயரில் திருத்தங்கள் ஏதும் இருந்தால் இணையதளத்தில் மேற்கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. https:/apply1.tndge.org/login என்ற அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் பள்ளிகள் தரப்பில் கொடுக்கப்பட்ட பாஸ்வேர்டை பயன்படுத்தி மாற்றங்கள் செய்யலாம் என தெரிவித்துள்ளது. வரும் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பணியை மேற்கொள்ளலாம் என்றும் இதுவே கடைசி வாய்ப்பு என்றும் கூறியுள்ளது.