தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை தொடரும்!!

 

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை தொடரும்!!

தமிழ்நாட்டில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக இன்று சேலம், தர்மபுரி, விழுப்புரம் ,திருவண்ணாமலை ,கடலூர் ,அரியலூர், பெரம்பலூர், தேனி ,திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தேனி ,திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை தொடரும்!!

வருகின்ற 7ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர் ,தேனி ,திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதேபோல் 8 மற்றும் 9-ம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை தொடரும்!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பிற்பகலில் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.வருகின்ற 7ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அத்துடன் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு ,அரபிக் கடல் பகுதிகள், கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது