தென் தமிழகத்தில் டிச.1 ஆம் தேதி முதல் மிக கனமழை : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் டிச.1 ஆம் தேதி முதல் மிக கனமழை : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஒன்றாம் தேதி தமிழகத்தில் கனமழை காரணமாக ஏனைய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தென் தமிழகத்தில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் டிச.1 ஆம் தேதி முதல் மிக கனமழை : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

நவம்பர் 30ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் டிச.1 ஆம் தேதி முதல் மிக கனமழை : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

முன்னதாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை 8.30 மணியளவில் உருவானது. இது அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் புயலாக மாறினால் அதற்கு ‘ புரெவி ‘ என பெயர் வைக்கப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.