“நல்ல பண்பாளர், திறமையானவர்” : துரைமுருகனுக்கு அண்ணாமலை பாராட்டு!

 

“நல்ல பண்பாளர், திறமையானவர்” : துரைமுருகனுக்கு அண்ணாமலை பாராட்டு!

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் 50 ஆண்டுகால சட்டமன்ற பணிகளைப் பாராட்டும் வகையில் கடந்த 23ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதல்வர் முக ஸ்டாலின் பேசினார். அதில் 100 ஆண்டு வரலாறு கொண்டிருக்கக்கூடிய இந்த சட்டப்பேரவைக்கு அரை நூற்றாண்டுக்கு முன் வந்தவர் தான் இங்கே அமைச்சராக இருக்கக் கூடிய அண்ணன் துரைமுருகன்.

“நல்ல பண்பாளர், திறமையானவர்” : துரைமுருகனுக்கு அண்ணாமலை பாராட்டு!

இந்த மன்றத்தை அலங்கரித்துக்கொண்டு இருக்க கூடியவர், மூத்த உறுப்பினராக இருக்கக் கூடியவர், தனிப்பட்ட முறையில் சொல்லவேண்டும் என்று சொன்னால் தலைவர் கலைஞர் அவர்களும், இனமான பேராசிரியர் அவர்களும், மறைந்த பிறகு ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு எனக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடியவர்தான் அண்ணன் துரைமுருகன் என்று புகழாரம் சூட்டினார்.இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ,பாமக சட்ட மன்ற தலைவர் ஜிகே மணி, பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் புகழ்ந்து பேசினர்.

“நல்ல பண்பாளர், திறமையானவர்” : துரைமுருகனுக்கு அண்ணாமலை பாராட்டு!

இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “கலைஞருக்குப் பிறகு பொதுப்பணித் துறையின் பொறுப்பினை ஏற்றவர்…நல்ல பண்பாளர், திறமையானவர், சங்கடங்களை கூட சாதுரியமான நகைச்சுவையால் சமாளிக்கும் திறமை கொண்டவர். சட்டமன்றத்தில் பொன்விழா காணும் அண்ணன் துரைமுருகன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.