4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.736 சரிவு; இன்றைய நிலவரம் என்ன?

 

4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.736 சரிவு; இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 அதிகரித்துள்ளது.

சென்னையில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை பெரிதளவில் மாற்றங்கள் ஏதுமின்றி ரூ.35 ஆயிரத்திலேயே நீட்டித்து வந்தது. பின்னர், கடந்த வாரத்தில் தங்கம் விலை திடீர் வீழ்ச்சியைக் கண்டு ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.736 குறைந்தது. தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்துள்ளது.

4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.736 சரிவு; இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.4,374க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.34,992க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.63.80க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.63,800க்கும் விற்பனையாகிறது.