மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ!

 

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 அதிகரித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் அமல்படுத்தப்பட்டிருக்கும் முழு ஊரடங்கால், தொழில்துறையில் மீண்டும் தேக்கம் நிலவுகிறது. கடந்த ஆண்டும் இதே போன்ற சூழல் ஏற்பட்டு, தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. அதே போல, இந்த முறையும் தங்கம் விலை உச்சத்தை அடைந்து விடுமோ என்ற அச்சம் சாமானிய மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. காரணம், கடந்த சில காலமாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது தான். எனினும், கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்தது சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக இருந்தது.

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ!

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று மீண்டும் ஏற்றத்தை சந்தித்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.4,611க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.112 அதிகரித்து 36,888க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200க்கும் விற்பனையாகிறது.