‘சிறையில் சொகுசு வசதி’ முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்!

‘சிறையில் சொகுசு வசதி’ முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை புழல் சிறைக்கு திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

‘சிறையில் சொகுசு வசதி’ முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்!

நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் ஐந்து ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்ததாகவும், அவரால் மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுத்த அவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்தி வருவதாகவும் சென்னை அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.நடிகை சாந்தினி புகாரை அடுத்து சென்னை அடையாறு மகளிர் போலீசார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்தநிலையில் சமீபத்தில் அவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

‘சிறையில் சொகுசு வசதி’ முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்!

இந்நிலையில் நடிகையை ஏமாற்றிய வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிகண்டனை புழல் சிறைக்கு மாற்றம் செய்தனர். சைதாப்பேட்டை சிறையில் மணிகண்டனுக்கு சொகுசு வசதி ஏற்படுத்தி தந்ததால் அவர் புழலுக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.