மனிதகுல வரலாற்றில் மாபெரும் சாதனை… விண்வெளி சுற்றுலா சென்ற நால்வர் – இதுவே முதன்முறை!

 

மனிதகுல வரலாற்றில் மாபெரும் சாதனை… விண்வெளி சுற்றுலா சென்ற நால்வர் – இதுவே முதன்முறை!

ஒரு காலத்தில் விண்வெளிக்குச் செல்வது மிகவும் அரிதான செயலாகப் பார்க்கப்பட்டது. அதற்குப் பின் தொழில்நுட்பம் வளர வளர விண்வெளிக்குச் செல்வது எளிதான காரியமாக மாறிக்கொண்டே வந்தது. ஒரு பெரிய அறையில் கணிணிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுடன் 100 விஞ்ஞானிகள் புடைசூழ விண்வெளிப் பயணம் செயல்படுத்தப்பட்டது.
அதிலும் பல மாதக் கணக்கில் பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்களே பயணப்பட்டனர். இருப்பினும் சாதாரண மனிதர்களுக்கு இதுபோன்ற விண்வெளிப் பயணம் எட்டாக்கனியாகவே இருந்தது.

மனிதகுல வரலாற்றில் மாபெரும் சாதனை… விண்வெளி சுற்றுலா சென்ற நால்வர் – இதுவே முதன்முறை!

ஆனால் அதெல்லாம் ஒரு காலம். இது நம்ம காலம் ஏறி ஆடுறா கபிலா என்பது போல தனியார் நிறுவனங்கள் சாதாரண மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரும் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் முக்கியமானது. இந்நிறுவனம் அமெரிக்க அரசுக்கு இணையாக விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தாண்டின் தொடக்கத்தில் ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் ஏவி உலக சாதனை படைத்தது ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம்.

மனிதகுல வரலாற்றில் மாபெரும் சாதனை… விண்வெளி சுற்றுலா சென்ற நால்வர் – இதுவே முதன்முறை!

முன்னதாக இந்தயாவின் இஸ்ரோ 2017ஆம் ஆண்டு 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியதே உலக சாதனை இருந்தது. ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் இதனை முறியடித்தது. தற்போது இதுவரை யாரும் செய்திட சாதனையையும் படைத்துள்ளது. ஆம் நான்கு அமெரிக்க மக்களை முதல்முறையாக விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்பியுள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.32 மணிக்கு ஃபால்கான் ராக்கெட் இந்த நால்வருடனும் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதன் மூலம் எலான் மஸ்க்கின் கனவுத்திட்டத்தின் ஒருபகுதி வெற்றியடைந்துள்ளது. இந்த நால்வரும் சாதாரண மனிதர்கள். இவர்களுடன் எந்த விண்வெளி வீரர்களும் செல்லவில்லை.

மனிதகுல வரலாற்றில் மாபெரும் சாதனை… விண்வெளி சுற்றுலா சென்ற நால்வர் – இதுவே முதன்முறை!

ராக்கெட் விண்ணில் பாய்ந்த 12 நிமிடங்களில் விண்கலம் தனியாகப் பிரிந்து, வெற்றிகரமாக பூமியின் நீள்வட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்தது. பூமியிலிருந்து 575 கி.மீ. உயரத்தில் இந்த விண்கலம் மூன்று நாட்களுக்குச் சுற்றி வரும். இதற்குப் பிறகு அட்லாண்டிக் கடலில் ஃபால்கான் ராக்கெட் தரையிறங்கும். இந்தச் சுற்றுலாவில் ஷிப்ட் 4 பேமெண்ட் நிறுவனத்தின் நிறுவனர் ஜார்ட் ஐசக்மேன், 29 வயதான மருத்துவர் ஹேலே ஆர்சனாக்ஸ், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் அமெரிக்க விமானப்படை முன்னாள் வீரர் கிறிஸ் செம்ப்ரோஸ்கி, பேராசிரியர் சியான் ப்ராக்டர் ஆகிய நால்வரும் சென்றுள்ளனர்.

மனிதகுல வரலாற்றில் மாபெரும் சாதனை… விண்வெளி சுற்றுலா சென்ற நால்வர் – இதுவே முதன்முறை!

இதில் ஆர்சனாக்ஸ் எலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டிருந்ததால் அவருக்கு இடது செயற்கைக்கால் பொருத்தப்பட்டுள்ளது. இவர் செயற்கைக்காலுடன் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். புவிஈர்ப்பு சக்தியில்லாத இடத்தில் எவ்வாறு நடந்து கொள்வது, எவ்வாறு பயணிப்பது உள்ளிட்ட பயிற்சிகளை இவர்கள் நால்வருக்கும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திரட்டப்படும் 20 கோடி டாலர் குழந்தைகளுக்கான புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சிக்கு வழங்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.