கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி களப்பணியில் அதிரடியாக களமிறங்கிவிட்டது அரசியல் கட்சிகள். ஒரு மாதத்தில் ஆட்சி கவிழும், இரண்டு மாதத்தில் ஆட்சி கவிழும் என்று விமர்சித்த எதிர்க்கட்சிகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக 3 ஆண்டுகளாக திறம்பட தமிழகத்தை வழி நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

கட்சிக்குள்ளே பல உட்பூசல்கள் இருப்பினும், மக்கள் பாதிக்காத வண்ணம் முடிவுகளை எடுத்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சியில் கொண்டு வந்த நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி மாவட்ட வாரியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்றும், இன்றும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஈரோடு மாவட்டம் ஓடாநிலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என பெயர் வைத்து கொண்டு ஈஸ்வரன் திமுகவுடன் எப்படி கூட்டணி வைத்தீர்கள்..? திமுக உறுப்பினராகி ஏன் திமுக சின்னத்தில் போட்டியிடுகிறீர்கள்.இதை உங்கள் இன மக்கள் ஏற்கவில்லை..இதை எண்ணிப்பாருங்கள்..அதிமுகவில் இருப்பவர்களும் கொங்கு இன மக்கள் தான்.1 சீட்டு 2 சீட்டுக்காக திமுக சின்னத்தில் உங்கள் கட்சியை அடமானம் வைத்துவிட்டீர்கள்.தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுங்கள்.

நீதிமன்றத்தில் ஸ்டாலின் பொய்யாக வழக்கு தொடர்ந்துள்ளார். திமுக ஆட்சியில் 200 கோடி டெண்டர் வைத்து அதனை 430கோடி ரூபாய் புதிய தலைமை செயலக கட்டிடத்திற்கு கூடுதலாக கொடுத்தனர். நான் விடுத்த சவாலை ஸ்டாலின் நேரடியாக ஏற்க வேண்டும். நீதிமன்றத்தில் உள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்டு நேரில் வந்து விவாதியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.