திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு வீடு புகுந்து கொலை மிரட்டல்

 

திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு வீடு புகுந்து கொலை மிரட்டல்

மதுரை விக்கிரமங்கலம் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றிய திமுக ஊராட்சி மன்றத் பெண் தலைவர் வீட்டிற்குள் ஐந்திற்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சென்று வீடு, கார் மீது கல்வீசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு வீடு புகுந்து கொலை மிரட்டல்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கீழப்பட்டி ஊராட்சியில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகவை சேர்ந்த பெண் பூங்கொடி பாண்டியன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்று ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன் அரசுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி ஆவணங்களை சரிபார்த்து அதிகாரிகள் முன்னிலையில் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அந்த இடத்தில் புதியதாக அங்கன்வாடி மையம் அமைக்க ரூ.10.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டிடப்பணிகள் மேற்கொள்ள ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி பாண்டியன் முயற்சி செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியை சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்கள், நேற்று இரவு ஊராட்சி மன்ற தலைவரின் வீடு புகுந்து கற்களை வீசியும், அங்கு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கியும், கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி பாண்டியன் புகாரின் அடிப்படையில் விக்கிரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.