பிளஸ் 2 பொதுத்தேர்வும் ரத்தா?.. அவசர ஆலோசனை!

 

பிளஸ் 2 பொதுத்தேர்வும் ரத்தா?.. அவசர ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. தேர்தலுக்கு பிறகு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, வரும் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை கடைபிடிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று பிற்பகல் அறிவித்தது. ஹோட்டல்கள், திருமண விழாக்கள், துக்க நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் என அனைத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவிட்டது.

பிளஸ் 2 பொதுத்தேர்வும் ரத்தா?.. அவசர ஆலோசனை!

இதனிடையே, மே 3ம் தேதி முதல் நடைபெறவுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்படி நடத்துவது என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் சூழலில் தேர்வை நடத்தினால் மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவர். இதைக் கருத்தில் கொண்டு, தேர்தலை நடத்துவதா? அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து கடந்த 5ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆலோசனை நடத்தியிருந்தார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வும் ரத்தா?.. அவசர ஆலோசனை!

இந்த நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வை மே 3ஆம் தேதி திட்டமிட்டபடி நடத்துவதா? என்பது பற்றி காணொலி காட்சி மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வி செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். இக்கூட்டத்துக்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கொரோனா பாதிப்பை காரணம் காட்டி 9,10,11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.