“கர்ப்பமானது கூட தெரியாமல் ஒரு வருஷமா… ” ஊனமுற்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை

 

“கர்ப்பமானது கூட தெரியாமல் ஒரு வருஷமா… ” ஊனமுற்ற பெண்ணுக்கு   நடந்த கொடுமை

ஊனமுற்ற பெண்ணை ஏமாற்றி ஒரு வருஷம் பலாத்காரம் செய்த வாலிபரை பிடிக்க போலீஸ் வலை வீசியுள்ளது

“கர்ப்பமானது கூட தெரியாமல் ஒரு வருஷமா… ” ஊனமுற்ற பெண்ணுக்கு   நடந்த கொடுமை


உத்தரபிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் அசீம்நகர் பகுதியில்16 வயது மாற்றுத்திறனாளி பெண் தன்னுடைய தாயாரோடு வசித்து வந்தார் .அவர்களின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் அவர்களின் உறவுக்கார வாலிபர் ஒருவர் வசித்து வந்தார் .அந்த பெண் ஊனமுற்றவர் என்பதால் அந்த பெண்ணின் தாயார் வெளியே செல்லும்போதெல்லாம் அந்த பக்கத்து வீட்டில் வசித்த உறவுக்கார வாலிபரிடம் உதவி செய்ய சொல்லியிருந்தார் .அந்த வாலிபரும் அந்த ஊனமுற்ற 16 வயதான பெண்ணுக்கு உதவி புரிவது போல வந்தார் .அப்போதெல்லாம் அந்த பெண்ணுக்கு ஆசை வார்த்தை கூறி அவரை பலாத்காரம் செய்துள்ளார் .இதனால் அந்த பெண் கர்ப்பமானார் .அவருக்கு தான் கர்ப்பமாயிருப்பது கூட தெரியாமல் அவரிடம் கடந்த ஒரு வருடமாக உறவு கொண்டுள்ளார் .
பின்னர் கரு வளர்ந்து வெளியே தெரிய ஆரம்பித்ததும் அவரின் தாயார் அதை கண்டுபிடித்தார் .அது பற்றி அவரின் மகளிடம் கேட்ட போது அவர் பக்கத்து வீட்டு வாலிபரால் இந்த கர்ப்பம் உண்டானது என்று கூறினார்
பிறகு அந்த சிறுமியின் கர்ப்பத்தினை கலைக்க டாக்டரிடம் கூட்டி சென்றார் .அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் கருக்கலைப்பு செய்வதற்கான சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் . பிறகு அவரின் தாயார் அந்த வாலிபர் மீது போலீசில் புகார் கூறினார்
அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குற்றம் சாட்டப்பட்ட உறவினரை கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது, .