ஆன்லைன் வகுப்புகளுக்கு தீபாவளி விடுமுறை அறிவிப்பு!

 

ஆன்லைன் வகுப்புகளுக்கு  தீபாவளி விடுமுறை அறிவிப்பு!

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு  தீபாவளி விடுமுறை அறிவிப்பு!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இருப்பினும் அரசு , தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் தொடர்ந்து பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக பள்ளிகள் திறக்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு  தீபாவளி விடுமுறை அறிவிப்பு!

இந்நிலையில் தீபாவளி பணிக்கையொட்டி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முத 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று குழந்தைகள் தினம் என்பதால் பல பள்ளிகள் அன்று போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளது. அதே சமயம், சில பள்ளிகள் வரும் 16 ஆம் தேதி வரை விடுமுறையை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது .