“சொன்னதை செய்திருக்கிறோம் ” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு!

 

“சொன்னதை செய்திருக்கிறோம் ” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு!

திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என ஈபிஎஸ் கூறியதற்கு வீடியோ மூலம் முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்று 4 மாதமே ஆன நிலையில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் சொன்னது மட்டுமின்றி சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளது திமுக அரசு என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த வீடியோவில் திமுக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

“சொன்னதை செய்திருக்கிறோம் ” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு!

அதில், மே 7ஆம் தேதி பதவியேற்ற சில மணி நேரத்திலேயே அறிந்து முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டேன். 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூபாய் 4000,ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம், மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவினத்தை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் அரசே ஏற்பு, இந்த ஐந்தில் முதல் நான்குமே திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தவை.

“சொன்னதை செய்திருக்கிறோம் ” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு!

வேளாண்மை உற்பத்தியை பெருக்கவும் ,விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும் முதல் முறையாக வேளாண்மை துறைக்கு என்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2750 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி , பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது, ஊரகப் பகுதிகளில் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவது, நமக்கு நாமே திட்டத்தில் உள்ளூர் சமூக மக்களுடன் இணைந்து 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவது , இயற்கை வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற உன்னத திட்டம் நடப்பாண்டு 2021-22 இல் செயல்படுத்துவது என பட்டியல் நீள்கிறது.

முன்னதாக தென்காசியில் உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக சட்டமன்ற தேர்தலில் 525 அறிவிப்புகள் வெளியிட்டது. திமுகவை பொறுத்தவரையில் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றுவது இல்லை. மேலும் விவசாயிகளை வஞ்சிக்கும் அரசு திமுக அரசாங்கம்” என்றார். இதற்கு பதிலடியாகவே முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.