ஆன்லைன் பணப் பரிவர்த்தனை – 16 இலக்க எண் , சிவிவி எண் இனி வேண்டாம்; ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு!

 

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை – 16 இலக்க எண் , சிவிவி எண் இனி வேண்டாம்; ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு!

ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யும் நபரா நீங்கள்? இது உங்களுக்கான செய்தி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதாவது சமீபகாலமாக ஆன்லைன் பரிவர்த்தனை என்பது அதிகமாகிவிட்டது. முன்பெல்லாம் வங்கிக்கு சென்று பணம் எடுத்து வந்த நிலை மாறி ஏடிஎம் கார்டுகள் மூலம் ஏடிஎம் சேவை மையங்களை அணுகி பணம் எடுத்து வந்தோம். தற்போது அதிலிருந்து மாறுபட்டு ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்து வருகிறோம்.

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை – 16 இலக்க எண் , சிவிவி எண் இனி வேண்டாம்; ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு!

இந்த சூழலில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டது. இந்த புதிய விதிமுறைகளின்படி ஆன்லைன் வணிக நிறுவனங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களை சேமிக்க கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்தது. E-commerce தலங்களான பிளிப்கார்ட் ,அமேசான், நெட்ப்ளிக்ஸ் உள்ளிட்ட தளங்களில் ஆன்லைன் பற்றிய தகவலும் இதுவரை வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்களை தங்களது சர்வர்களில் சேமித்து வந்தன. இதில் சிவிவி என்னை மட்டும் உள்ளிட்டு ஓடிபி எனப்படும் ரகசிய எண்ணை பதிவிட்டால் பரிவர்த்தனை செய்யப்படும்.

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை – 16 இலக்க எண் , சிவிவி எண் இனி வேண்டாம்; ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு!

ஆனால் புதிய வழிகாட்டுதலின் படி ஒவ்வொரு ஆன்லைன் பரிவர்த்தனைகளை போதும் 16 இலக்க எண்ணை பதிவிட்டு சிவிவி, காலாவதி தேதி ஆகியவற்றை அனைத்தையும் பதிவிட்டால் மட்டுமே பரிவர்த்தனை நடைபெறும் வகையில் புதிய விதிமுறை விதிக்கப்பட்டது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். இருப்பினும் ஆன்லைன் பரிவர்த்தனை என்பது காலதாமதம் ஆகும் என்றாலும் வாடிக்கையாளர்களின் வங்கி தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். இந்த புதிய விதிமுறைகள் வருகின்ற ஜனவரி 20 2022ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை – 16 இலக்க எண் , சிவிவி எண் இனி வேண்டாம்; ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு!

தற்போது புதிய அறிவிப்பும் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் டோக்கனிசேஷன் என்பது அட்டை விவரங்களை ‘டோக்கன்’ எனப்படும் மாற்று குறியீட்டை மாற்றும் செயல்முறையாகும். இதற்கு டோக்கன் ரெக்வஸ்டட் என்ற ஆப்ஷனை வாடிக்கையாளர் அளிக்க வேண்டும். டோக்கனிசேஷன் ஆப்ஷனை வாடிக்கையாளர் பெற்று விட்டால் எங்கு உங்கள் டெபிட் / கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினாலும் உங்கள் சிவிவி எண், 16 இலக்க எண்ணை மீண்டும் பதிவிட வேண்டும் என்ற அவசியமில்லை. டோக்கனிசேஷன் அட்டையாக உங்கள் டெபிட் / கிரெடிட் கார்டுகளை மாற்றும் பட்சத்தில் உங்கள் தரவுகள் பாதுகாப்பாக இருப்பதை நீங்கள் உணரலாம். இது பாயிண்ட்-ஆஃப்-சேல் (பிஓஎஸ்) முனையங்கள் மற்றும் கியூஆர் குறியீடு மூலம் பணம் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. டோக்கன் கோரிக்கையாளரால் வழங்கப்பட்ட பயன்பாட்டில் கோரிக்கையைத் தொடங்குவதன் மூலம் அட்டைதாரர்கள் இந்த பயனை பெறலாம். தொடர்பு இல்லாத அட்டை பரிவர்த்தனைகள், QR குறியீடுகள் மற்றும் பயன்பாடுகள் மூலம் பணம் செலுத்துதல் போன்ற அனைத்தும் மொபைல் போன்கள் அல்லது டேப்லெட்டுகள் மூலம் பெற்று கொள்ள ஏதுவாக இருக்கும்.