சென்னையில் உள்ள 6 பிரபல ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

 

சென்னையில் உள்ள 6 பிரபல ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் 6 தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சென்னையில் உள்ள 6 பிரபல ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தி.நகர் உள்ளிட்ட 6 தனியார் ஹோட்டல்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேர்வு முகாம் நடைபெற்று வருகிறது. லண்டனுக்கு செல்வோருக்கு விசா ஏற்பாடு செய்து தருவதற்காக நேர்காணல் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் அந்த குறிப்பிட்ட 6 ஹோட்டல்களிலும் வெடிகுண்டு வெடிக்க போவதாக அந்தந்த தனியார் ஹோட்டலின் இமெயிலுக்கு குறுந்தகவல் ஒன்று இன்று காலை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தனியார் ஹோட்டல் நிர்வாகம் நேரடியாக காவல் ஆணையர் இமெயிலுக்கு அனுப்பி புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இமெயில் வந்த ஐடியை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 3 நாட்களில் சுதந்திர தினம் வர உள்ள நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட ஹோட்டல்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.