நஷ்டமோ! நஷ்டம்… டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதிக்கோரி போராட்டம்!!

 

நஷ்டமோ! நஷ்டம்… டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதிக்கோரி போராட்டம்!!

தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகளுடன் 3 ஆயிரம் பார்கள் செயல்பட்டுவருகிறது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், பொது முடக்க தளர்வுகளுக்கு பின்னர் திறக்கப்பட்டன. இருப்பினும் தமிழகத்தில் இன்னும் பார்கள் திறக்கப்படவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதமே பார்கள் திறக்கப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் அது குறித்த எந்த அறிவிப்பையும் இதுவரை தமிழக அரசு வெளியிடவில்லை. தீபாவளிக்கு திறக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் அதற்கான அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை.

நஷ்டமோ! நஷ்டம்… டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதிக்கோரி போராட்டம்!!

இந்நிலையில் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி வழங்கக்கோரி வரும் 7 ஆம் தேதி போராட்டம் நடத்த பார் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். கடந்த 9 மாதங்களாக பார்கள் மூடப்பட்டுள்ளதால் ரூ.400 கோடி வரை வாடகை பாக்கி உள்ளதாகவும் டாஸ்மாக் பார் சங்கம் தெரிவித்தனர். மேலும், டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி வழங்காததை கண்டித்து வரும் 7- ஆம் தேதி அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர்கள தெரிவித்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளுடன் பார்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.