ஏழை, எளிய மாணவர்கள் இலவச கல்விக்கு விண்ணப்பிக்கலாம் – சென்னை பல்கலை. அறிவிப்பு!

 

ஏழை, எளிய மாணவர்கள் இலவச கல்விக்கு விண்ணப்பிக்கலாம் – சென்னை பல்கலை. அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

ஏழை, எளிய மாணவர்கள் இலவச கல்விக்கு விண்ணப்பிக்கலாம் – சென்னை பல்கலை. அறிவிப்பு!

இதனிடையே தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதளம் தொடங்கி வைக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்திருந்தார். அதன் படி கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் இலவச கல்விக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் ஏழை, எளிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், www.unom.ac.in என்ற இணையதளத்தில் இது பற்றிய விவரங்களை அறிந்த கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.