தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம்… 90 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்ற பேரன்!

 

தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம்… 90 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்ற பேரன்!

பெரம்பலூர்

பெரம்பலூரில் குடும்ப தகராறில் மூதாட்டியை கழுத்தை நெரித்துக் கொன்ற பேரன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் அருகே உள்ள ஏ.ஆர்.சி நகரை சேர்ந்தவர் பச்சையம்மாள் (90). கணவரை இழந்த இவர் தனது மருமகள் மற்றும் பேரன் கோகுல் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், மூதாட்டி பச்சையம்மாள் அடிக்கடி தனது மருமகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கர்ப்பிணியாக உள்ள பேத்தியையும் திட்டிக் கொண்டிருந்துள்ளார். இதனால் கோகுல் அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம்… 90 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்ற பேரன்!

இந்த நிலையில், நேற்று காலை வீட்டின் முன்னால் மூதாட்டி பச்சையம்மாள் நீண்ட நேரமாக படுத்துக் கிடந்துள்ளார். இதனால், அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது அவரது கழுத்தில் காயங்களுடன் சடலமாக கிடப்பது தெரியவந்தது. மேலும், அவர் அணிந்திருந்த வெள்ளி மோதிரம் மற்றும் பணம் ஆகியவையும் திருடுபோனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம்… 90 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்ற பேரன்!

மேலும், இதுதொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பச்சையம்மாளின் பேரன் கோகுல் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது தாயையும், அக்காவையும் திட்டியதால் ஆத்திரத்தில் பாட்டியை, அய்யலூரை சேர்ந்த கலையரசன் உதவியுடன் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கோகுல் தெரிவித்தார்.

மேலும், கொலையை திசை திருப்புவதற்காக மூதாட்டி அணிந்திருந்த நகை மற்றும் பணம் திருடு போனதாக நாடகமாடியதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, கோகுல் மற்றும் அவரது நண்பர் கலையரசன் ஆகியோரை கைதுசெய்த போலீசார், இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.