திருப்பதியில் 8-ஆம் தேதி முதல் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி

 

திருப்பதியில் 8-ஆம் தேதி முதல் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி

திருப்பதி: திருப்பதியில் 8-ஆம் தேதி முதல் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மார்ச் இறுதி முதல் மூடப்பட்டன. ஆனால் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும் நாட்டில் பெரும்பாலான கோவில்களில் எப்போதும்போல பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பதியில் 8-ஆம் தேதி முதல் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் தரிசனம் செய்வதற்கு ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றாலும் அங்கு தெய்வத்திற்கு பூஜைகள் தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில், தற்போது திருப்பதி கோவிலில் தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்களுக்கும், தேவஸ்தான ஊழியர்களுக்கும் மட்டும் ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது.

உள்ளூர் பக்தர்கள் கோவில் வளாகத்தில் சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜூன் 8-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் 6 அடி இடைவெளி விட்டு வரிசையில் நின்று தரிசனம் செய்ய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.