அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் !

 

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் !

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் !

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி கடந்த சில வாரங்களுக்கு முன்பு புகார் அளித்தார். அந்த புகாரில் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னுடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்தினார். அவரால் நான் மூன்று முறை கருவுற்று கருக்கலைப்பு செய்யப்பட்டேன். திருமணம் செய்யாமல் தன்னை ஏமாற்றியதுடன் அடித்து துன்புறுத்துகிறார் என போலீசில் புகார் அளித்தார். நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டன் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த சூழலில் அவர் சமீபத்தில் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில் அவர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் !

இந்நிலையில் நடிகையை ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க மணிகண்டனுக்கு ஐகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு காவல்துறை முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திட மணிகண்டனுக்கு ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை அளித்த புகாரில் மணிகண்டன் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .