நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை முதன்மை நீதிமன்றம்

 

நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை முதன்மை நீதிமன்றம்

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை முதன்மை நீதிமன்றம்

நடிகை மீரா மிதுன்,  பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில்வீடியோ ஒன்றை  வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.


இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட  7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  மேலும் மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த மாதம் 14 ம் தேதி  கைது செய்யப்பட்டனர்.புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மீரா மிதுன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 35 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டதில் சோர்வு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.இதையடுத்து
மீராமிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி,நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.