நடிகை சஞ்சனா கல்ராணி மருத்துவமனையில் அனுமதி!

 

நடிகை சஞ்சனா கல்ராணி மருத்துவமனையில் அனுமதி!

கன்னட நடிகையும் நிக்கி கல்ராணியின் சகோதரியுமான சஞ்சனா கல்ராணி போதை பொருள் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதாகவும் போலீசார் இவரை கைது செய்தனர். கடந்த சில மாதங்களாக சிறையில் இருந்த சஞ்சனா கல்ராணி சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

நடிகை சஞ்சனா கல்ராணி மருத்துவமனையில் அனுமதி!

நடிகை சஞ்சனா கல்ராணி , ராகினி திவேதி இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா? என்பதை உறுதிசெய்ய இவர்களின் தலைமுடி தடவியல் தடய அறிவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடிகை சஞ்சனா கல்ராணி மருத்துவமனையில் அனுமதி!

இந்த சூழலில் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகை சஞ்சனா கல்ராணி உடல்நலக்குறைவால் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார் . அவர் எந்த தவறும் செய்யவில்லை பழைய விஷயங்களை நினைத்து பார்க்க விரும்பவில்லை என அவரது தாய் கூறியுள்ளார்.