அதிவேகமாக பைக்கில் சென்ற பிரபல தெலுங்கு நடிகர் கவலைக்கிடம்

 

அதிவேகமாக பைக்கில் சென்ற பிரபல தெலுங்கு நடிகர் கவலைக்கிடம்

ஹைதராபாத்தில் அதிவேகமாக பைக்கில் சென்ற தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் பலத்த காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.

அதிவேகமாக பைக்கில் சென்ற பிரபல தெலுங்கு நடிகர் கவலைக்கிடம்

தெலுங்கு திரைப்பட மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரி விஜயதுர்கா மகனும் டோலிவுட் நடிகருமான சாய் தரம் தேஜ் ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள கேபிள் பிரிட்ஜில் தனது ஸ்போட்ஸ் பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சுயநினைவை இழந்தார்.

கண், மார்பு மற்றும் அடிவயிற்றில் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அவர், உடனடியாக ஹைடெக் சிட்டியில் உள்ள தனியார் மருத்துவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது சாய் தர்ம தேஜ் கோமா நிலைக்கு சென்றதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மருத்துவர்கள் ஐசியுவில் வென்டிலேட்டரில் வைத்து தேஜுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அதிவேகமாக பைக்கில் சென்ற பிரபல தெலுங்கு நடிகர் கவலைக்கிடம்

அதிவேகமாக சென்றதே விபத்துக்கான காரணம் என உள்ளூர்வாசிகள் கூறினாலும், விபத்து எப்படி நடந்தது என்பதை அறிய சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

சாய் தரம் தேஜ் உடல்நிலை குறித்து தெலுங்கு பட தயாரிப்பாளாரான ஸ்ரீனிவாச குமார் கூறுகையில், “சாய் நன்றாக இருக்கிறார். கவலைப்பட தேவையில்லை அவர் நிச்சயம் மீண்டு வருவார். மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்” என தெரிவித்துள்ளார்.