கோடியை தொட்ட முதல் நடிகர்… தனுஷின் புதிய மைல்கல்

 

கோடியை தொட்ட முதல் நடிகர்… தனுஷின் புதிய மைல்கல்

ட்விட்டரில் ஒரு கோடி பின் தொடர்பாளர்களை பெற்ற முதல் தமிழ் சினிமா நடிகர் என்ற பெருமையை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார்.

கோடியை தொட்ட முதல் நடிகர்… தனுஷின் புதிய மைல்கல்

1983 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி பிறந்த நடிகர் தனுஷ், நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றிவருகிறார். இவர் நடித்த திருடா திருடி (2003), சுள்ளான் (2004), புதுப்பேட்டை (2006), பொல்லாதவன் (2007), ஆடுகளம் (2011), 3 (2012), வேலையில்லா பட்டதாரி (2014), மாரி (2015), அசுரன் (2019) ஆகிய தமிழ் திரைப்படங்கள் ஹிட் அடித்து மாபெரும் வெற்றியை பெற்றுதந்தன. அதேபோல் ராஞ்சனா (2013) போன்ற இந்தி திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பாலிவுட் திரையுலகிலும் கொடிக்கட்டிபறக்கிறார். இவர் 40 க்கும் மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 13 தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள், 9 விஜய் விருதுகள், 7 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 5 விகடன் விருதுகள், 5 எடிசன் விருதுகள், 4 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் போன்றவை வென்றுள்ளார்.

கோடியை தொட்ட முதல் நடிகர்… தனுஷின் புதிய மைல்கல்

இதுவரை எந்த கோலிவுட் நடிகருக்கு இவ்வளவு பின் தொடர்பாளர்கள் இல்லை. இதன்மூலம் தமிழ் சினிமாவின் மூத்த ஜாம்பவான்களை நடிகர் தனுஷ் பின்னுக்கு தள்ளியுள்ளார். கோலிவுட் வட்டாரத்தில் இதுவரை கமல்ஹாசன் 68 லட்சம் பின் தொடர்பாளர்களையும், நடிகர் ரஜினி 59 லட்சம் பின் தொடர்பாளர்களையும் கொண்டுள்ளனர். இதேபோல் நடிகர் விஜய் 32 லட்சம் பின் தொடர்பாளர்களை கொண்டுள்ளார்.