தாய் அடித்ததால் 9 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை

 

தாய் அடித்ததால் 9 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள கச்சுப்பள்ளி கிராமத்தில் சாருநிதி என்ற 9 வயது சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய் அடித்ததால் 9 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை

கச்சுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கணேசன்- பிரியா தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பிரியாவின் கணவர் கணேசன் உடல்நலக்குறைவால் காலமானதைத் தொடர்ந்து பிரியா அருகில் உள்ள பருத்தி ஆலையில் கூலி வேலைக்கு சென்றுக்கொண்டு மாமியார் மற்றும் இரண்டு குழந்தைகளையும் பராமரித்துவந்தார். இதனிடையே நேற்று மதியம் சாப்பாட்டிற்கு வந்த பிரியா வீட்டிலுள்ள வேலைகள் எதுவும் செய்யாமலும் வளர்ப்பு மாடுகளையும் கவனிக்காமல் இருந்த மகள் சாருநிதியை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் உள்ள இரும்பு ரேக்கில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே தாய் பிரியா கூலி வேலையை முடித்துவிட்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் தூக்கிட்டு இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார்.

இது குறித்து கொங்கணாபுரம் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.