தமிழகத்தில் வீணாக்கப்பட்ட 8.83% கொரோனா தடுப்பூசிகள்!

 

தமிழகத்தில் வீணாக்கப்பட்ட 8.83% கொரோனா தடுப்பூசிகள்!

தமிழகத்தில் மொத்தமாக 4, 497 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு பாட்டில் மருந்தை திறந்து விட்டால் அதனை 4 மணி நேரத்திற்குள்ளாக பயன்படுத்த வேண்டும். அதற்குப் பின் பயன்படுத்தினால் அதன் வீரியத்தன்மை குறைவாக இருக்கும். தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல தடுப்பூசி மையங்களில் மருந்துகள் வீணாவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் வீணாக்கப்பட்ட 8.83% கொரோனா தடுப்பூசிகள்!

இது குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒரு மையத்தில் கடைசியாக 10 பேர் வந்தால் அவர்களுக்கு தடுப்பூசி போடாமல் அனுப்ப முடியாது. இதை பெரிதுப்படுத்துகிறார்கள். தடுப்பூசி வீணாவதை 5 சதவீதத்திற்கும் கீழ் குறைத்துள்ளோம். மே மாதத்தில் தடுப்பூசி வீணாக்கப்படுவதை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தமிழகத்தில் வீணாக்கப்பட்ட 8.83% கொரோனா தடுப்பூசிகள்!

இந்த நிலையில், தமிழகத்தில் 8.83% தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 3.57 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என்றும் அடுத்த மூன்று நாட்களில் கூடுதலாக 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 16 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது. தேசிய தடுப்பூசி சட்டத்தின் கீழ் 10 சதவீதம் வரை தடுப்பூசி வீணாவது அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.