7 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே தடாலடி

 

7 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே தடாலடி

ஏழு சிறப்பு ரயில்களை தடாலடியாக ரத்து செய்திருக்கிறது தெற்கு ரயில்வே.

கொரோனா தொற்று அச்சம், கொரோடா ஊரடங்கு ஆகியவற்றினாலும், டவ் தே புயலினாலும் பயணிகள் வருகை குறைவாக இருந்ததால் 7 சிறப்பு ரயில்களை ரத்து செய்துவிட்டது தெற்கு ரயில்வே.

7 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே தடாலடி

மே17ம் தேதியில் இருந்து மே 31ம் தேதி வரையிலும் இயக்கப்பட இருந்த 7 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூரில் இருந்து மன்னார்குடி செல்லும் ரயில்,

கண்ணூரில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து கண்ணூர் செல்லும் ரயில்,

ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கும், கண்ணூரில் இருந்து ஆலப்புழாவுக்கும் செல்லும் ரயில் மற்றும்,

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கும் செல்லும் ரயில் ஆகிய 7 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.