4560 அடி உயர பர்வத மலை – சிவன் பாதம் காண சென்ற இளைஞர் உயிரிழப்பு

 

4560 அடி உயர பர்வத மலை – சிவன் பாதம் காண சென்ற இளைஞர் உயிரிழப்பு

பர்வத மலையில் சிவன் பாதம் காண சென்ற இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை: பர்வத மலையில் சிவன் பாதம் காண சென்ற இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் கிராமங்களை ஒட்டி பர்வத மலை 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற சித்தர் மலைகளில் பர்வதமலையும் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இம்மலை அமைந்துள்ளது. சிவன் தனது பாதத்தை இந்த மலை மீது வைத்ததாக வரலாறு உண்டு. இதனால் ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி நாளில் பர்வத மலைக்கு வருவார்கள். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் எனும் இளைஞர் (27) தன்னுடைய நண்பர்கள் மூன்று பேருடன் பர்வத மலைக்கு சென்றுள்ளார்.

ttn

எந்த தங்கு தடையின்றி நன்றாக மலையேறிய காமராஜ், மலை உச்சியில் உள்ள சிவன் பாதத்துக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ந்து போன அவரது நண்பர்கள் உடனடியாக 108-க்கு போன் செய்தனர். அத்துடன் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதற்கிடையில் முதலுதவி குழுவினரும் மலை மேலே சென்று காமராஜ்க்கு முதலுதவி அளித்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் டோலி கட்டி காமராஜை மலை மீது இருந்து கீழே கொண்டு வந்தனர்.

ஆனால் வரும் வழியிலேயே காமராஜின் உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற உயிரிழப்புகள் அடிக்கடி ஏற்படுவதால் மலை அடிவாரத்தில் முதலுதவி மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.