கட்டாய திருமணம் – சிறுமி தூக்கிட்டு தற்கொலை

 

கட்டாய திருமணம் – சிறுமி தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீரமலை கிராமத்தை சேர்ந்த பிரேம்குமாருக்கும்(வயது21), சூளகிரி அடுத்த அஞ்சலகிரி கிராமத்தை சேர்ந்த 17வயது சிறுமிக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு திருமணம் நடைபெற்றது.

கட்டாய திருமணம் – சிறுமி தூக்கிட்டு தற்கொலை

இந்த திருமணத்தில் சிறுமிக்கு சம்மதம் இல்லை. உறவினர்கள் மற்றும் பெற்றோர்களின் வற்புறுத்தலின் பேரில் இந்த திருமணத்திற்கு அவர் சம்மதித்துள்ளார். அதனால் திருமணத்திற்கு விருப்பம் இல்லாமலேயே பிரேம்குமாருடன் வாழ்ந்து வந்துள்ளார். இப்படியே நான்கு மாதங்களை ஓட்டிவிட்ட சிறுமிக்கு அதற்கு மேலும் பிரேம்குமாருடன் காலம் தள்ள விருப்பம் இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்த சூழலில் பிரேம்குமார் வழக்கம் போல் டைல்ஸ் வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுவிட்டார்.

17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது குறித்தும், திருமணமான 4 மாதத்தில் தற்கொலை செய்துகொண்டது குறித்தும் நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.