பிரபல நடிகர் மகேஷ் காத்தி அப்பல்லோவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

பிரபல நடிகர் மகேஷ் காத்தி அப்பல்லோவில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகரும், இயக்குனருமான மகேஷ் காத்தி(43) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

பிரபல நடிகர் மகேஷ் காத்தி அப்பல்லோவில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்

தெலுங்கு திரை உலகில் பிரபல திரைப்பட விமர்சகரும், திரைகதை ஆசிரியருமான மகேஷ் காத்தி பின்னர் நடிகராகி இயக்குனரும் ஆனார். இவருக்கு என்று தெலுங்கு திரையுலகில் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

பிரபல நடிகர் மகேஷ் காத்தி அப்பல்லோவில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்

2015ஆம் ஆண்டு பெசராட்டு என்கிற தெலுங்கு படத்தை இயக்கியுள்ள மகேஷ் காத்தி திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதி வந்தார். மகேஷ் காத்தி ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று புகழ் பெற்றுள்ளார்.

பிரபல நடிகர் மகேஷ் காத்தி அப்பல்லோவில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்

இவர் அண்மையில் நெல்லூரில் இருந்து தனது காரில் ஹைதராபாத் சென்ற போது லாரியுடன் மோதிய விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பிரபல நடிகர் மகேஷ் காத்தி அப்பல்லோவில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் மகேஷ் காத்தி உயிரிழந்தது அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.