’18 மாணவிகள் புகார்’ சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

 

’18 மாணவிகள் புகார்’ சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளராக இருந்து வந்த சிவசங்கர் பாபா அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு கடந்த 13ஆம் தேதி  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. முன்னாள் மாணவிகள் பலர் புகார் அளித்த நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு டெல்லியில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

’18 மாணவிகள் புகார்’ சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

இந்நிலையில் சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கை போக்சோ பிரிவின் கீழ் மாற்ற சிபிசிஐடி போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறது. 3 வழக்குகளில் 2 வழக்கு போக்சோவில் பதிவான நிலையில் சட்ட வல்லுனர்களுடன் சிபிசிஐடி ஆலோசனை செய்து வருகின்றனர். இதுவரை 18 முன்னாள் மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில் ஒரு வழக்கீழ் மட்டும் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

’18 மாணவிகள் புகார்’ சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

இதனிடையே நடத்தப்பட்ட விசாரணையில் சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக ஆபாசமாக சாட் செய்து, பயன்படுத்தி வந்த யாஹூ ஈமெயில் முடக்கப்பட்டது.சுஷில் ஹரி இன்டெர்நேஷனல் பள்ளி ஈமெயில் முகவரி மூலம் சிவசங்கர் பாபா மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி வந்ததற்கான ஆதாரமும் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.