முழு ஊரடங்கு எதிரொலி- தமிழகத்தில் 16 ரயில்கள் ரத்து

 

முழு ஊரடங்கு எதிரொலி- தமிழகத்தில் 16 ரயில்கள் ரத்து

தமிழகத்தில் புதிதாக 14,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,66,329 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 9,142 பேஷண்ட்ஸ் டிஸ்சார்ஜான நிலையில் 80 பேர் உயிரிழந்தனர்.

முழு ஊரடங்கு எதிரொலி- தமிழகத்தில் 16 ரயில்கள் ரத்து

இதனிடையே கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வரும் ஏப்ரல் 20ஆம் தேதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு இரவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேர ஊரடங்கின் போது பேருந்து, ஆட்டோ, டாக்ஸி சேவைக்கு அனுமதி இல்லை.

இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமையன்று 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையும் குறைப்படுகிறது. நீண்ட நேரம் செல்லக்கூடிய நைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் வழக்கம்போல் இயப்படும் எனவும், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் உட்பட 16 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.