நவம்பர் 17ல் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னையின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்படுகிறது 

 

நவம்பர் 17ல் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னையின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்படுகிறது 

புதுச்சேரி அன்னையின் மகா சமாதி தினம் வருகின்ற நவம்பர் மாதம் 17 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

மந்திரம் இல்லை, ஸ்லோகம் இல்லை, அர்ச்சனை சீட்டு வாங்க வேண்டாம்,அபிஷேகச் சீட்டும் வேண்டாம்,நம்பிக்கை ,நம்பிக்கை மட்டும் உங்களிடம் இருந்தால் போதும் அன்னையிடம் உங்கள் பிரார்த்தனையை வைத்து பரிபூரண பலன் பெறலாம் என்பது அன்னையை வணங்குபவர்களின் அதீத நம்பிக்கையாகும்.

annaijukl

மூன்று தேவியாரின் (ஸ்ரீலட்சுமிதேவி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீமகாகாளி) ஒருங்கிணைந்த வடிவாக அன்னை பார்க்கப்படுகின்றார். மகான் ஸ்ரீஅரவிந்தர் இந்த மூன்று வடிவிலேயேயும் அன்னையைப் பார்த்துப் பரவசம் கொண்டார்.

புதுவை ஆசிரமத்தில் இருந்தபோது அன்னை தினசரி தரும் பால்கனி தரிசனம் மிகவும் பிரசித்துப் பெற்றது. இந்த தரிசனத்துக்காகக் காத்துக் கிடந்தார்கள் அன்பார்கள். 

lotus

இந்த தரிசனம் பெற்ற அனைவருமே பாக்கியசாலிகள். திருமண பாக்கியம் வேண்டியும், பிள்ளைப் பேறு வேண்டியும் அன்னையின் முன் பிராத்தனை செய்து, பலன் அடைந்தவர்கள் இருக்கிறார்கள்.

இடைவிடாத பிரார்த்தனை மூலம் தங்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை விரட்டுவதற்கு அன்னை அருளிய பிரார்த்தனை முறைகளை கண் கண்ட மருந்தாகக் கருதி வருகிறார்கள் அன்னையின் பக்தர்கள்.

அன்னையின்  பக்தர்கள் உள்ளன்போடும் உருக்கத்தோடும் அன்னையிடம் பிரார்த்தனை மேற்கொள்கிறார்கள்.

flowers

பிரார்த்தனை நம்மை ஆண்டவன் பாதையில் பாதி வழிக்குக் கொண்டு செல்லும். உபவாசம் இறைவனுடைய அரண்மனை வாயில் வரை செல்வதற்கு நமக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கும் என்பது ஒரு பாரசீகப் பழமொழியாகும் இந்த பழமொழியை அன்னையின் பக்தர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

1878-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 21- ஆம் நாள் வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில் அன்னை அவதரித்தார்.அன்னையின் பூர்வீக பெயர் பிளாஞ்சி ராக்சேல் மிர்ரா.சிறு வயதில் இருந்தே ஆன்மீக ஆற்றல்கள் மிர்ராவுக்குள் பெருகி இருந்தது .

கலைகளுக்கும் நாகரிகத்துக்கும் பேர்போன பிரான்ஸ் நாட்டில் பிறந்த மிர்ரா, பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள பாரத தேசத்தின் தொன்மையாலும் ஆன்மிக சக்தியாலும் கவரப்பட்டார்.

arovill

படிக்கின்ற காலத்திலேயே அடிக்கடி தியான நிலைக்குப் போய் விடுவார் மிர்ரா.சமைக்கும்போதும், சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதும் திடீர் திடீரென சாமதி நிலைக்கப் போய் விடுவார். 

பிரான்ஸில் இருந்தபோது அவரது கனவில் பல ஆன்மிகப் பெரியவர்களும் அவ்வப்போது தோன்றி போதித்திருக்கின்றனர். அவர்களுள் ஒளி வீசும் கண்களுடனும், நீண்ட தாடியுடன் கூடிய ஒருவர் அடிக்கடி கனவில் வந்து இந்திய தத்துவங்கள் மற்றும் வேத உபநிஷத்துக்களை மிர்ராவுக்குப் போதித்திருக்கிறார்.

ஒவியத்தில் தேர்ச்சி பெற்றிருந்த மிர்ரா, தன் கனவில் அடிக்கடி வரும் அந்த தாடிக்கார அன்பரை உருவமாக வரைந்தார். 

arovillk

பிற்காலத்தில் பாண்டிச்சேரியில் ஸ்ரீஅரவிந்தரை தரிசித்தபோது அவரே தனக்கு கனவில் வந்து உண்மைகளை போதித்த ஆசான் என்பதையும், அவரைத்தான் படமாகத் தீட்டி வைத்தருக்கறோம் என்பதையும் உணர்ந்தார்.

ஸ்ரீஅரவிந்தர் பல சந்தர்ப்பங்களில் சிறுமியான மிர்ராவை ஆட்கொண்டிருக்கிறார்.சிறு வயதிலேயே கீதையைப் படித்திருக்கிறார் மிர்ரா.

அதில் வரும் கண்ணபிரானைத் தரிசிக்க ஆசைப்பட்டிருக்கிறார். பின்னாளில் இந்தியா வந்தபோது மகரிஷி அரவிந்தரைப் பார்த்து வணங்கியவுடன் அவர் கண்டது மகான்அரவிந்தரை அல்ல…. சாட்சாத் ஸ்ரீகிருஷ்ண பகவான்! ஆகிய  ஸ்ரீஅரவிந்தர் ஆவார்.

 பாண்டிச்சேரி ஸ்ரீஅரவிந்த ஆசிரமம் தன்னைத் தேடி வருகின்ற பக்தர்களுக்கு நிம்மதியையும் பரிபூரண அருளையும் கொடுக்க வல்லது.

இத்தகைய இடத்தில்தான் கண்களைக் கவரும் இதமான இயற்கைச் சூழலில் பல விதமான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் செடிகளின் நடுவே இன்றைக்கு அன்னை அமர்ந்திருக்கின்றார்.

pondicherry

நீங்கள் வாழ்ந்து வருகின்ற இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். எப்படிஇல்லத்திலும், வெளியிலும் சுத்தத்தைப் பேணுகிறீர்களோ, அதேபோல் உங்களது அகத்தூய்மையும் அமையட்டும்.

சத்தியம், அன்பு, கருணை, சேவை மனப்பான்மை, அடக்கம் எல்லாம் வாய்த்தவராக நீங்கள் விளங்குதல் வேண்டும் . தீய குணங்கள் அணுவளவும் உங்களிடம் எட்டிப் பார்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

யோகத்தை ஏற்பதற்கு நாம் விலக்க வேண்டுபவை என்று நான்கு விஷயங்களை அன்னை சொல்கிறார்.அவை; அரசியல், தாம்பத்திய உறவு, புகைப்படிப்பது, மது. 

good one

செடியுடன், மரங்களுடன், பூக்களுடன் பேசுவார் அன்னை. அன்னையின் சிரிப்பில் கூட அந்தப் பூக்கள் மலர்ந்த தருணம் உண்டு. ஆத்மார்த்தமாக அன்னையிடம் சரண் அடையுங்கள்.

உங்களுக்கு உண்டான பிரச்னையை ஒரு நண்பரிடம்  தீர்வு வேண்டிச் செல்பவரிடம் சொல்வது போல் உருக்காமாக எடுத்துரையுங்கள். மூன்று நாட்கள் இடைவிடாமல் வாயாலோ மனதாலோ பிரார்த்தனையைச் சொல்லுங்கள். 

எப்போதெல்லாம் உங்கள் மனம் வாடுகிறதோ, அப்போதெல்லாம் அன்னையை நினையுங்கள். ஒருவன் செய்த தவறுக்கான பிராயச்சித்தம் என்பது தவறை ஒப்புக் கொள்வது மட்டுமல்ல.

இனிமேலும் அத்தகைய தவறுகள் நிகழா வண்ணம் தெய்வசித்தத்துக்குத் தன்னை முழுமையாகத் திறந்து ஒப்படைத்தலே ஆகும் என்கிற அன்னையின் திருவாக்கை ஏற்றுக் கொண்டு நடந்தால் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெறலாம்.