வேளாண் விளைபொருள் ஒப்பந்த விவசாய சட்டம், விவசாயிகளுக்கு எதிரானது அல்ல : எடப்பாடி பழனிசாமி

வேளாண் விளைபொருள் ஒப்பந்த விவசாய சட்டம், விவசாயிகளுக்கு எதிரானது அல்ல : எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு வேளாண் விளை பொருள் ஒப்பந்த விவசாய சட்டத்தை இயற்றியது.

விவசாயிகளின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு வேளாண் விளை பொருள் ஒப்பந்த விவசாய சட்டத்தை இயற்றியது.

Farmers

அந்த சட்டத்தின் படி. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும். ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட அன்று விவசாயிகளிடம் நிர்ணயித்த விலையைத் தான் கொள்முதல் செய்யும் போது கொடுத்து வாங்க வேண்டும். இதனிடையில், அதிக உற்பத்தி காரணமாக விலைக் குறைவு ஏற்பட்டால் அதற்கு விவசாயிகள் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாது. இந்த சட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தமிழக அரசு இயற்றியுள்ள இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். 

Edapadi

இது குறித்து இன்று சேலம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் நலனுக்காகவே இந்த சட்டம் இயற்றப் பட்டுள்ளது என்றும் அனைத்து விவசாயிகளுக்கும் இந்த சட்டம் கட்டாயமில்லை, விருப்பமுள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை எந்த விவசாயியும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் ஒரு சில லெட்டர்பேட் அமைப்புகளே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.