விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்! போதையில் இருந்ததால் விபரீதம்!! 

 

விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்! போதையில் இருந்ததால் விபரீதம்!! 

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகை யாஷிகா ஆனந்தின் சொகுசு கார் மோதி சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞர் படுகாயமடைந்தார். 

Accidnet
உணவு டெலிவரி செய்யும் இளைஞரான பரத், நுங்கம்பாக்கத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக வந்த யாஷிகாவின் கார் பரத் மீது மோதியது. மேலும் அருகிலிருந்த கடை மீது மோதியது. இதில் பரத்துக்கு பலத்த காயமும், கடையும் முற்றிலும் சேதமடைந்தது. கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து நிகழ்விடத்திற்குவந்த காவல்துறையினர் பரத்தை மீட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்து நிகழ்ந்த போது காரில் யாஷிகா ஆனந்தும் இருந்துள்ளார். மேலும் காரிலிருந்தவர்களும், காரை ஓட்டியவரும் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.