மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

 

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே 65 லட்சத்துமாக அதிகரித்துள்ளது. 9லட்சத்து 59ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல அரசியல் பிரமுகர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.