மனைவி பிணமாய்  கிணற்றில் மிதப்பதை கண்ட கணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை

மனைவி பிணமாய்  கிணற்றில் மிதப்பதை கண்ட கணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை

காணாமல் போன மனைவி பிணமாய்  கிணற்றில் இருப்பதை கண்ட கணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன மனைவி பிணமாய்  கிணற்றில் இருப்பதை கண்ட கணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை தீபம் நகர் இருகூரில் வசித்து வந்த மூதாட்டி சாரதா (70) கடந்த 26ம் தேதி முதல் 
காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் சாரதா சடலமாக கிடப்பதாக அவரது கணவர் கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

suicide

தகவல் அறிந்து வந்து பார்த்த முதியவரான கிருஷ்ணன், மனைவியின் சடலத்தை கண்டவுடன் மனமுடைந்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்னை காரணமாக சாரதா மன வருத்தத்தில் இருந்ததாகவும், அதற்காகத்தான் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.