பெண் பயணிகள் மிரட்டி கற்பழிப்பு! ஆட்டோ ஓட்டுநர் அராஜகம்!

 

பெண் பயணிகள் மிரட்டி கற்பழிப்பு! ஆட்டோ ஓட்டுநர் அராஜகம்!

சேலத்தில், ஆட்டோவில் வாடிக்கையாக ஏறி அலுவலகத்திற்கும், கல்லூரிக்கும் செல்லும் பெண்களை ஆசை வார்த்தை பேசி, வீட்டிற்கு அழைத்துச் சென்று கத்தி முனையில் மிரட்டி கற்பழித்துள்ளார் ஆட்டோ ஓட்டுநர் மோகன்ராஜ். இவர் பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோக்களாகவும் பதிவு செய்து, வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக அந்த பெண்களை மிரட்டி தொடர் கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளார்.

mohanraj

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் புகார் அளித்ததன் பேரில் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஆட்டோ மோகன்ராஜின் ஆதரவாளர்கள் சிலர் பாதிக்கப்பட்ட பெண்களிடம், போலீஸ் விசாரணைக்கு செல்ல வேண்டாம் என கூறி பணம் தருவதாக பேரம் பேசியுள்ளனர். பணம் பெற மறுத்தவர்களிடம் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைத்தால் தங்களிடம் உள்ள வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்ட தொடங்கியுள்ளனர். இதனால் பலரும் புகார் கொடுக்க முன்வரவில்லை.  

crime

இந்நிலையில் நேற்று, மோகன்ராஜால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளார். ஆட்டோ மோகன்ராஜ் மீது பலாத்காரம், அடைத்து வைத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், அடித்து தாக்குதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து. விசாரித்து வருகின்றனர்.