நன்கொடை வழங்கினால் திருப்பதியில் விஐபி தரிசனம் 

நன்கொடை வழங்கினால் திருப்பதியில் விஐபி தரிசனம் 

நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி தரிசன டிக்கெட் வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி தரிசன டிக்கெட் வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அண்மையில் விஐபி தரிசன கட்டண முறைகளை நீக்கிவிட்டு, ஆலய அபிவிருத்திக்கான சிறுவானி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குவோருக்கு மட்டும் தரிசனத்தில் முன்னுரிமை வழங்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. 

thiruppathi

இந்நிலையில் இன்று  திருப்பதியில் நடந்த தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டத்தில் மீண்டும் விஐபி டிக்கெட் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.