திருடச் சென்று உயிரை இழந்த வாலிபர்! நிலைதடுமாறிய சோகம்!

திருடச் சென்று உயிரை இழந்த வாலிபர்! நிலைதடுமாறிய சோகம்!

மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர் காடு, பனந்தோப்பு தெருவை சேர்ந்தவன் ஸ்டாண்டு மணி என்கிற மணிகண்டன். இவன் மீது அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர் காடு, பனந்தோப்பு தெருவை சேர்ந்தவன் ஸ்டாண்டு மணி என்கிற மணிகண்டன். இவன் மீது அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

theif

இந்நிலையில், காமராஜர் தெருவில் உள்ள ராஜலெட்சுமி என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து அருகில் உள்ள மொட்டை மாடிக்கு திருடச் சென்ற போது, மணிகண்டன் குதித்ததாகவும் 15 அடி உயரத்தில் இருந்து குதித்த போது, நிலை தடுமாறி தரையில் விழுந்ததாக கூறப்படுகிறது. 

dead

சத்தம் கேட்டு வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர், 15 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால், மணிகண்டன் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அறிந்து காவல்துறையினருக்கு தகவல் தந்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.