ட்விட்டரில் ட்ரெண்டாகும் #அப்டேட்_விடு_அர்ச்சு! தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!! 

 

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #அப்டேட்_விடு_அர்ச்சு! தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!! 

பிகில் படம் தொடர்பான அப்டேட்களை கேட்டு படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்திக்கு விஜய் ரசிகர்கள் கோரிக்கை எழுப்பிவருகின்றனர். இதற்காக உருவானதுதான் #அப்டேட்_விடு_அர்ச்சு என்ற ஹேஷ்டேக்… 

பிகில் படம் தொடர்பான அப்டேட்களை கேட்டு படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்திக்கு விஜய் ரசிகர்கள் கோரிக்கை எழுப்பிவருகின்றனர். இதற்காக உருவானதுதான் #அப்டேட்_விடு_அர்ச்சு என்ற ஹேஷ்டேக்… 

Bigil

பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த 21ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து படத்தின் 3 போஸ்டர்கள் வெளியாயின. இதன் மூலம் விஜய் பிகில் படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதியானது. அதன்பின், பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது விஜய் பேசிய வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிகில் தீயை கிளப்பிவிட்டன. 

bigil

இந்தப்படத்தில் விஜய் ஃபுட் பால் கோச்சாகவும், நயன்தாரா ஃபுட்பால் பிளேயராகவும் நடிக்கின்றனர். பிகில் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது. ஆனால் இதுவரை டீசர் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் வெளியிடவில்லை. வார இறுதிநாளான இன்று அல்லது நாளை வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் இதுவரை தயாரிப்பாளர் எந்தவொரு அறிவிப்பை வெளியிடவில்லை. அதனால் அர்ச்சு அக்கா எதாவது அப்டேட் சொல்லுங்க என ரசிகர்கள் நச்சரிக்கின்றனர். இதனால் #அப்டேட்_விடு_அர்ச்சு என்ற ஹேஷ்டேக்.. ட்ரெண்டாகிவருகிறது. 
 

bigil

விஜய் ரசிகர்கள் ஒருபுறம் இப்படி அலப்பரை செய்துகொண்டிருக்கும் நிலையில் நடிகர் அஜித் ரசிகர்களும் ஒருபுறம் வினோத்தை நச்சரிக்க தொடங்கியுள்ளனர். விஜயின் 74 படம் குறித்து நிமிடத்திற்கு நிமிடம் அப்டேட்கள் வந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் வினோத் அஜித் நடிக்கும் அடுத்தப்படம் குறித்து எந்தவொரு அப்டேட்டையும் இதுவரை கொடுக்கவில்லை… விஜய் படம் குறித்து அப்டேட்கள் தொடர்ந்துவருகிறது என்பதை குறிப்பிட்டு வினோத்திடம் அப்டேட்ஸ்களை கேட்டு தல ரசிகர்கள் நச்சரிப்பை தொடங்கியுள்ளனர். நடிகர் அஜித், நேர்கொண்ட பார்வைக்கு பின் எச். வினோத்துடைய இயக்கத்தில் தான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.