சொந்த வீடு யோகம் தரும் ஆலயம்! அப்புறம் பாருங்க யோகத்தை!

 

சொந்த வீடு யோகம் தரும் ஆலயம்! அப்புறம் பாருங்க யோகத்தை!

வீட்டில் குழந்தைகள் குதித்து விளையாடக் கூடாது, அதிகமான சப்தம் வரக்கூடாது, காலி செய்யும் போது திரும்பவும் வெள்ளையடித்து தர வேண்டும், உறவினர்கள் யாரும் வரக்கூடாது என்று ஏகப்பட்ட நிபந்தனைகளோடு வாடகை வீடுகளில் வசித்து வருபவர்களின் கனவு, புறா கூண்டு போல இருந்தாலும்.. அதாங்க… எலி வளையாக இருந்தாலும் தனி வளையாக இருக்க வேண்டும் என்பதாக தான் இருக்கும்.

வீட்டில் குழந்தைகள் குதித்து விளையாடக் கூடாது, அதிகமான சப்தம் வரக்கூடாது, காலி செய்யும் போது திரும்பவும் வெள்ளையடித்து தர வேண்டும், உறவினர்கள் யாரும் வரக்கூடாது என்று ஏகப்பட்ட நிபந்தனைகளோடு வாடகை வீடுகளில் வசித்து வருபவர்களின் கனவு, புறா கூண்டு போல இருந்தாலும்.. அதாங்க… எலி வளையாக இருந்தாலும் தனி வளையாக இருக்க வேண்டும் என்பதாக தான் இருக்கும். சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது பெரும்பாலான மிடில் க்ளாஸ் மக்களின் வாழ்க்கை கனவாகவே இருக்கிறது. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கிறது என்று இதுநாள் வரையில் அங்கலாய்த்தவர்கள் இனியும் காலத்தை விரயமாக்காமல், நீங்கள் நினைத்ததை அருளும் தெய்வத்திடம் உங்களது கோரிக்கையை முன் வையுங்கள்.

murugan

இந்த ஆலயத்திற்கு சென்று வணங்கி வந்தால், உங்கள் சொந்த வீட்டுக் கனவு விரைவில் கைகூடி வரும். கந்த சஷ்டி விழா நடைப்பெற்று வரும் இந்நேரத்தில் இந்த கட்டுரை உங்கள் கண்களில் பட்டிருப்பதே உங்களுக்கு தெய்வத்தின் அருள் இருப்பதைத் தான் காட்டுகிறது. இந்த கட்டுரையைப் படிக்கத் துவங்கிய இந்த நிமிஷத்திலேயே நீங்கள் சொந்த வீடு வாங்குவதற்கான முதல் அடியை எடுத்து முன் வைத்திருக்கிறீர்கள்.
முருகனின் அறுபடை வீடுகள் இருந்தாலும், சிறுவாபுரி தலம் விசேஷமானது. அருணகிரிநாதர் மகிழ்ச்சியுடனும் குளிர்ச்சியுடனும் உயர்ச்சியுடனும் போற்றிய தலம் சிறுவாபுரி. இன்று நமக்குக் கிடைத்துள்ள 1331 திருப்புகழ்ப் பாடல்களில் மகிழ் மீற, மகிழ் கூர, மகிழ்வாக, இன்பமுற மகிழ்கூற என்று நான்கு முறைகளாக மகிழ்ச்சியைக் காட்டியுள்ள ஒரே தலப்பாடல் சிறுவாபுரி தான்.  அது மட்டுமா ‘தண் தரள மணிமார்பன், தந்தமிழின் மிகுநேயன்; தண் சிறுவை’ என்று குளிர்ச்சி (தண்)யை மூன்றுமுறை பாடியுள்ளதும் இந்த ஒரே பாடலில் தான். எனவே தான் மகிழ்ச்சியும் குளிர்ச்சியும் நிறைந்த சிறுவாபுரி தலத்தில், திருப்புகழ் பாடி வழிபட்டால் சொந்த வீட்டில் மகிழ்ச்சியுடன் வாழலாம் என்ற ரகசியத்தைத் தெரிந்துக் கொள்ளுங்கள். 

temple

அடியார்கள் சிந்தையில் குடியேறி அவர்கள் விருப்பம் போல் சொந்த வீட்டிலும் குடியேற வழி செய்வான் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்கள். குபேர பட்டணம் போல வளம் நிறைந்த சிறுவையில், வேண்டிய வரத்தை மிகுதியாக அளிக்கும் பெருமானாகத் திகழ்கிறார் முருகன். அருணகிரியார் இந்த தலத்தில் தாம் கண்ட அருட்காட்சியின் பதிவாக சிறுவாபுரி தலத்தில் பாடியுள்ள ‘அண்டர் பதிகுடியேற…’ என்று தொடங்கும் தலப் பாடலை நூறு முறை ஒரே நாளில் ஆலயத்தில் அமர்ந்து பாராயணம் செய்யலாம். சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் வழியில், சென்னையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுவாபுரி. ஒருமுறை சென்று வழிபட்டு பாருங்கள்… விரைவிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும். முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமைகளில் சென்று வழிபட்டால் கூடுதல் விசேஷம்.