காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே தொடர வேண்டும் – கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே தொடர வேண்டும் – கே.எஸ்.அழகிரி

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த படுதோல்விக்கு பொறுப்பேற்று, கடந்த மே மாதம் ராகுல் காந்தி தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு குழப்பங்கள் நிலவின. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மீண்டும் ராகுல் காந்தி வரவேண்டும் என ஒரு குழுவும், பிரியங்கா காந்தி வர வேண்டும் என ஒரு குழுவும், காந்தி குடும்பமே வேண்டாம் என ஒரு குழுவும் அந்த கட்சிக்குள் குரல்கள் எழுந்தன. இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். இதனையடுத்து அப்போதைக்கு காங்கிரஸ் தலைவர் பதவி விவகாரம் அடங்கியது. ஆனால் தற்போது மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்னை சோனியா காந்தி கட்சியின் தலைவராகத் தொடர வேண்டும். கோடிக்கணக்கான இந்திய மக்களும், காங்கிரஸ் கட்சியின் செயல் மறவர்களும் சோனியா, இராகுலை பின்பற்றுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.