எடப்பாடி பழனிசாமி சிறந்த ஆட்சியாளராக மாறி வருவதற்கு பாராட்டும், நன்றியும்! – சுரேஷ் காமாட்சி

 

எடப்பாடி பழனிசாமி சிறந்த ஆட்சியாளராக மாறி வருவதற்கு பாராட்டும், நன்றியும்! – சுரேஷ் காமாட்சி

தமிழக முதல்வர் பழனிசாமி சிறந்த ஆட்சியாளராக மாறி வருவதாக திரைப்பட தயாரிப்பாளரும், நாம் தமிழர் கட்சியின் தீவிர செயற்பாட்டாளருமான சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.

சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமி சிறந்த ஆட்சியாளராக மாறி வருவதாக திரைப்பட தயாரிப்பாளரும், நாம் தமிழர் கட்சியின் தீவிர செயற்பாட்டாளருமான சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு காரணமாக இடும்பாவனம், அடஞ்சவிளாகம் பகுதியில் குடிசைகள் அமைத்து பிழைத்து வரும் 40-க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்கள் உணவுக்கு வழியில்லாமல் அல்லாடி வருவதாக நாம் தமிழர் கட்சி பிரமுகர் இடும்பாவனம் கார்த்தி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

ttn

அதற்கு முதல்வர் பழனிசாமியின் பேஸ்புக் கணக்கில் இருந்து பதில் அளிக்கப்பட்டது. அந்த நரிக்குறவர்களில் ஒருவரின் செல்போன் எண்ணை பகிர்ந்தால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான உணவை கொண்டு சேர்ப்பதாக அந்த பதிலில் கூறப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கைக்கு திரைப்பட தயாரிப்பாளரும், நாம் தமிழர் கட்சியின் தீவிர செயற்பாட்டாளருமான சுரேஷ் காமாட்சி முதல்வர் பழனிசாமியை பாராட்டி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில் “எங்கோ ஒரு குரல் கேட்டதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன் வருபவரே சிறந்த ஆட்சியாளர். எளிமையான எளிதான அணுகுமுறையால் மக்களோடு மக்களாக, அவர்களுக்கான தலைமையாக, சிறந்த ஆட்சியாளராக மாற விளையும் முதல்வருக்கு @CMOTamilNadu மனம் நிறைந்த பாராட்டும் நன்றியும். தொடரட்டும் சிறந்த பணி!” என்று கூறியுள்ளார்.