இளைஞர்களிடம் இருந்து 4.4 கிலோ கஞ்சா பறிமுதல்: மதுரை காவல் துறை அதிரடி..!

 

இளைஞர்களிடம் இருந்து 4.4 கிலோ கஞ்சா பறிமுதல்: மதுரை காவல் துறை அதிரடி..!

திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள இரு இளைஞர்களிடம் 2.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

இக்காலத்து இளைஞர்களிடம் போதைப் பொருட்களின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கஞ்சா போன்ற போதைப் பொருட்களை உபயோகிப்பது மட்டுமல்லாமல், அதனை விற்றும் வருகின்றனர் . இரு நாட்களுக்கு முன்னர் சென்னை, தாம்பரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், 1 கிலோ கஞ்சா வைத்திருந்த 1 பெண் உட்பட 4 பேரைக் கைது செய்தனர்.

Ganja

இதனையடுத்து, இன்று மதுரையில் கஞ்சா விற்கப்படுகிறது என்று தகவல் அறிந்து சென்ற போலீசார் அம்மாவட்டம் முழுவதும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள இரு இளைஞர்களிடம் 2.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

Ganja

தொடர் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர் கீரத்துறை பகுதியில் 2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நபர்களிடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடும் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். மேலும், மதுரை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.