அடிபட்ட நல்ல பாம்பிற்கு நடந்த ‘ஆபரேஷன்’…!

 

அடிபட்ட நல்ல பாம்பிற்கு நடந்த ‘ஆபரேஷன்’…!

சற்று நேரம் கழித்து, மயக்கம் தெளிந்த அந்த பாம்பு சீறி பாய்ந்து தன் இயல்பை வெளிப்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் அருகே முனியாண்டிபுரத்தில், அடிபட்ட நல்ல பாம்பு ஒன்று நகர முடியாமல் ஊர்ந்து சென்றுள்ளது. அதனைக் கண்ட மக்கள் உடனே திருநகர் ஊர்வன அமைப்புக்குத் தகவல் அளித்துள்ளனர். உடனே அங்கு விரைந்து வந்த ஊர்வனத் துறையினர் அந்த பாம்பை எடுத்துக் கொண்டு அருகே இருந்த கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு இருந்த மருத்துவர்கள் அந்த நல்ல பாம்பைப் பரிசோதனை செய்தனர்.

Snake

அதில், அந்த பாம்பிற்குப் பலத்த அடி பட்டிருந்ததால் அதற்கு உடனே அறுவை சிகிச்சை செய்தால் தான் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்கு ஊர்வன அமைப்பினர் ஒப்புதல் அளித்ததால் அந்த நல்ல பாம்பிற்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின், 2 மணி நேரமாக மருத்துவர்கள் அந்த பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

Operation

அறுவை சிகிச்சைக்குப் பின்னர், சிறிது நேரமாகப் பாம்பு மயக்கத்தில் இருந்துள்ளது. சற்று நேரம் கழித்து, மயக்கம் தெளிந்த அந்த பாம்பு சீறி பாய்ந்து தன் இயல்பை வெளிப்படுத்தியுள்ளது. பாம்பின் அந்த செயலைக் கண்ட மருத்துவர்கள், பாம்பிற்குச் சிகிச்சை நல்ல படியாக நடந்துள்ளதால் அது தன் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என்று தெரிவித்துள்ளனர். 

Snake