அடகு கடை பின்பக்கம் துளையிட்டு 2. 50 லட்சம் கொள்ளை!

 

அடகு கடை பின்பக்கம் துளையிட்டு 2. 50 லட்சம் கொள்ளை!

திருவண்ணாமலை அருகே அடகு கடையில் இருந்த 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

திருவண்ணாமலை அடுத்த பெரிய கோளாப்பாடி கிராமத்தில் உள்ள வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமாக தீபம் திருப்பதி என்கிற பெயரில் அடகு கடை வைத்துள்ளார். ஆகஸ்ட் 25- ஆம் தேதி காலை வழக்கம் போல் தனது அடகுகடையை திறக்க வந்துள்ளார். கடையை திறந்து உள்ளே சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி. காரணம், நேற்று இரவு புகுந்த மர்ம கும்பல் பின்பக்கமாக சுவரை துளையிட்டு உள்ளே சென்றுள்ளனர். அடகு கடையில் இருந்த 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

theft

லாக்கரில் இருந்த 20 லட்சம் மதிப்புள்ள அடமான நகை இருக்கிறதா என்பது குறித்து காவல்துறையினர் லாக்கரை உடைத்து சோதனையிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொள்ளை சம்பவம் குறித்து திருவண்ணாமலை எஸ்.பி சிபி சக்கரவர்த்தி தலைமையில் கைரேகை போலீசார், மோப்ப நாய் வரவழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கிராமங்களில் நகை அடகு கடைகள், சிறிய நகைக்கடைகள் உள்ளன. இந்த கடைகளை நடத்துபவர்கள், இந்த திருட்டால் அதிர்ச்சியடைந்துள்ளனர்