டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி வழங்க உத்தரவு!

 

டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி வழங்க உத்தரவு!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ள தமிழக அரசு, மக்கள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாகத் தமிழகத்தில் எல்லையோர மாவட்டங்களில் வணிக வளாகங்கள் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ள தமிழக அரசு, மக்கள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கொரோனா பீதியால் மால்கள், தியேட்டர்கள் எல்லாம் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஆனால், டாஸ்மாக்குகள் மட்டும் மூடப்படவில்லை.

ttn

இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ன எடுக்கப்பட்டன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதனால், அனைத்து டாஸ்மாக் மதுபான கடை மாவட்ட மேலாளர்களுக்கும் மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கொரோனா பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் முககவசம், கிருமி நாசினி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.