தேனியில் பேருந்தை சேதப்படுத்தியவருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

 

தேனியில் பேருந்தை சேதப்படுத்தியவருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சின்னமனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலிகுத்தி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த பவுன்ராஜ்தேவர் மகன் செல்வராஜ் என்ற செல்லா என்பவர் கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி பல்லவராயன் பட்டியில் குடிபோதையில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்தார். இதில் பேருந்தில் நடத்துனர் அளித்த புகாரின் பேரில் சின்னமனூர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து செல்லாவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார், இதனால் இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது

தேனியில் பேருந்தை சேதப்படுத்தியவருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

விசாரணைக்கு பின் இந்த வழக்கில் செல்லா குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு நான்கு வருடங்கள் மற்றும் ஒரு மாத கடுங்காவல் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தண்டனை வழங்கப்பட்டது . அந்த அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஆறு மாத காலம் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கை அரசுத் தரப்பில் திறம்பட வாதுரைத்த அரசு வழக்கறிஞர் கணேசன் அவர்களையும் வழக்கில் சாட்சியங்களை முறையாக ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் தலைமை காவலர் செல்வம் அவர்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார் மேலும் அரசு போக்குவரத்து துறையை சேர்ந்த பேருந்துகளை யாரேனும் சேதப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேனி மாவட்ட கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்